கனிமொழி எம்பி வீட்டில் பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற காவல் துறை!!


சென்னை சிஐடி காலனியில் மறைந்த முன்னாள் முதல்வர் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி வீட்டில் தினமும் ஒரு ஏட்டு உட்பட நான்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கனிமொழி காவல்துறை டிஜிபி யிடம் கடந்த 23ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.


இந்நிலையில் கனிமொழி வீட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இரவோடு இரவாக காவல்துறை திரும்பப் பெற்றது. 


கொரோனா காலத்தில் தடுப்புப்பணிக்கு காவல் துறையின் தேவை அதிகரித்துள்ளதாலும் கனிமொழிக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்ற காரணத்தினாலும் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.