விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!


         விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் மற்றும் குறுவட்டம் திருச்சுழி கிராமத்தை சேர்ந்த சிம்சோன்(வயது25) த/பெ பால்ராஜ் என்பவர் வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்றவர் (8.6.2020) அன்று திருச்சுழி திரும்பியுள்ளார். (13.6.2020) அன்று கடம்பங்குளத்தில் வைத்து பரிசோதனை செய்ததில் மேற்படி நபருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.



      அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் பால்ராஜ் (தந்தை) வயது 45
லதா (தாய்) வயது 40  கிறிஸ்டோபர் (ஆண்) (சகோதரர்) வயது20 சோபியா (சகோதரி) வயது 21 மற்றும்  மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அக்கம்பக்கத்தினரை மருத்துவ குழுவினர் விசாரித்து வருகின்றனர். செய்தியாளர்.மகேஷ்.