அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறுத்தம்!!!

சீனாவுடனான எல்லைப்பிரச்னை எதிரொலியால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.



ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா - சீனா இடையே எல்லைப்பிரச்னை தீவிரமாக உள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் கட்டுமான பணிகள் பூஜைகளுடன் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்து வரும் நாட்களில் தேசத்தின் பாதுகாப்பு சூழ்நிலையை பொறுத்து ராமர் கோயில் கட்டுமானப் பணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ள அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஷ்ரா, கட்டுமான பணி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.