மதுரையில் முழு ஊரடங்கு!!!

துரையில் சென்னையைப் போலவே நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.



மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பரவை பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


ஆட்டோ மற்றும் தனியார் கார்கள் மற்றும் தனியார் பேருந்து ஆகியவை இயங்கக் கூடாது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தேவையான அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று மதுரை மாநகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். 


மதுரை மாவட்ட நிர்வாக ஆட்சியர் அலுவலகம், மதுரை மாநகராட்சி அலுவலகம்  உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் 33 சதவீத ஊழியர்களைக் கொண்டு செயல்பட வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்போர் அலுவலகம் செல்ல அனுமதி கிடையாது.


இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே மதுரை விமான நிலையம் மற்றும் மதுரை ரயில் நிலையம் செல்வதற்கு அனுமதி அல்லது ஆட்டோவில் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எந்த ஒரு தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடைகள் முழுவதுமாக காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்கும் திறந்திருக்கும். அந்த நேரத்தில் கடைகளிலேயே வந்து பொருட்கள் வாங்குபவர்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கவேண்டும். தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. அம்மா உணவகம் வழக்கம்போல் இயங்கும்.