இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவின் CERT எனப்படும் கணினி அவசரகால பதில் குழுவிற்கு எச்சரிக்கை சென்றுள்ளது.
சீன அரசு இந்தியாவில் இருக்கும் அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். முக்கியமாக பாதுகாப்பு துறை அம்சங்கள் மீது சீனா தாக்குதல் நடத்த போகிறது. வங்கிகள் மீதும், தனியார் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்த சீனா முயன்று வருகிறது. இதனால் இணையத்தில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவின் CERT எனப்படும் கணினி அவசரகால பதில் குழுவிற்கு எச்சரிக்கை சென்றுள்ளது. இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இந்த நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று Cyfirma ஒரு பட்டியலை CERTக்கு அனுப்பி உள்ளது. இதில் விரைவில் CERT முடிவு எடுக்கும் என்கிறார்கள்.