பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் பி.கண்ணன் சென்னையில் இன்று காலமானார்.
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் சென்னையில் வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவருக்கு வயது 69. இவர் பாரதிராஜா அவர்களுடன் 40திற்கும் மேற்ப்பட்ட படங்களில் பணியாற்றியவர். இவர் காதல் ஓவியம், மண்வாசனை, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர்.
இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகன் மற்றும் பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலைகள் ஓய்வதில்லை, கண்களால் கைது செய் ஆகிய திரைப்படங்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை இருமுறை பெற்றுள்ளார்.
இவர் 2001ம் ஆண்டு வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை பெற்றவர்.
இவரது இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.