பலமிழக்கும் திமுக...

ஒரே ஆண்டில் 3 எம்எல்ஏக்கள் மரணம்..! சட்டமன்றத்தில் பலமிழக்கும் திமுக...



   திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணமடைந்ததன் மூலம் சட்டமன்ற தொகுதிகளின் காலி இடங்கள் 3 ஆக அதிகரித்துள்ளது.


 சென்னை சேப்பாக்கம் தொகுதியை சேர்ந்தவர் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன். 


  கொரோனா தொற்று காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.


  பிப்ரவரி 27 அன்று உடல்நலக்குறைவால் தனது 57-வது வயதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) காலமானார்.


  மற்றொரு திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் (குடியாத்தம்) அப்போலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 28 அன்று காலை அவர் காலமானார்.


  தற்போது ஜெ. அன்பழகன் மரணமடைந்துள்ளார். இவரது இறப்பு திமுகவின் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.  அன்பழகனின் எதிர்பாராத மறைவால் சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக அதிகரித்துள்ளது.


  தற்போதைய நிலவரப்படி, அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 124ஆகவும், திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 97ஆகவும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர், இந்திய யூனியன் முஸ்லீன் லீக், சுயேட்சை, நியமனம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தலா ஒன்றாக உள்ளது.