பாட புத்தகங்களுக்கான விலை பட்டியல்!!!!


பாட புத்தகங்களுக்கான விலை பட்டியலை  தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பதினோராம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வகுப்பு பாட புத்தகங்களுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை அதிகபட்சமாக 150 ரூபாய் வரை  நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 130 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையும், பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அதிகபட்சமாக 180 ரூபாய் வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.