பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு!!!..

திருச்சியில் பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு.



திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராமதாஸ், பணியில் இருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து  ராமதாஸ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  ராமதாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பணியில் இருந்த காவலர் உயிரிழந்தது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.