96 - படத்தின் இரண்டாம் பாக கதையை மாற்றியமைத்த திரிஷா.


          C.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 96.  இந்தபடத்தில் இறுதிவரை ராமுவும் ஜானுவும் சேரமாட்டார்கள்.   இந்த நிலையில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் திரிஷா ரசிகர்களுடன் டிக்டக் செய்துள்ளார்.


 அதில் அவர் 96 திரைப்படத்தின் கதையின் இரண்டாம் பாகத்திற்கு ஐடியா கொடுத்துள்ளார்.96 படத்தில் ஜானுவின் கணவர் இறந்துவிடுகிறார் தனிமையில் இருக்கும் ஜானு ராமுவிடம் பேச இறுதியில் இருவரும் சேர்ந்து விடுகின்றனர். என ஐடியா கொடுத்துள்ளார்
  ஜானுவின் கணவர் பிசினஸ் மீட்டிங்கிற்காக வெளியூர் செல்கிறார் அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. ஜானுவின் கணவர் கொரோனா  பாதிப்பால் ஒரு வாரத்திற்குள் இறந்துவிடுகிறார் . இதனால் தனிமை அடைந்த ஜானு தனது சோகத்தை மறப்பதற்காக வீடியோ கால் மூலமாக ராமுவிடம் பேச இருவரும் இறுதியில் சேர்ந்து விடுகின்றனர் என ஐடியா கொடுத்துள்ளார்.
  இதை பார்த்த ரசிகர்கள் ராமுக்கு கொரோனா  வராம பார்த்துக்குங்க என கிண்டலடித்து வருகின்றனர்.
     -நா.அருண் இன்றைய வார இதழ்  சினிமா செய்திகள்