இன்று அமேசான் ப்ரைமில் வெளியான பெண்குயின் படம் எப்படி இருக்கு?
பெண்குயின் - திரை விமர்சனம்
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாகவும் தன்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை இப்படத்தில் நிரூபித்துள்ளார்.
கதைச்சுருக்கம்:
கீர்த்தி சுரேஷ் திருமணமாகி தன் கணவர் மற்றும் ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு வருகிறார். தன் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனது மகனை தொலைத்து விட்டு 6 வருட காலமாக தேடிக்கொண்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷை பற்றி தெரிந்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். கீர்த்தி சுரேஷ் தனது மகனுக்கு சொல்லிய கதைகள் போலவே படத்தின் காட்சிகள் அனைத்தும் நகர்கிறது.
ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷின் மகன் கிடைத்து விடுகிறான். மகனை கடத்தியவரை கண்டுபிடித்த பிறகு கீர்த்தி சுரேஷின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாக அமைகிறது.
நடிப்பு :
கீர்த்தி சுரேஷ் ஒரு தாயாக தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தனது மகன் மீது கொண்ட பாசத்தால் பல போராட்டங்களைக் கடந்து தனது மகனை கண்டுபிடிக்கிறார். படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தின் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் சுவாரஸ்யமான காட்சிகளில் திரில்லர் காட்சிகள் அதிகமாக தந்து மக்களை ஈர்த்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு கார்த்திக் பழனி. இப்படத்தின் எடிட்டர் அணில் கிரேஸ். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.