ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கடப்பாவிற்கு பெட்ரோ கெமிக்கல் எடுத்துச் சென்ற சரக்கு ரயிலில், பிரகாசம் மாவட்டம் சுறா ரெட்டி பள்ளி அருகே அதிகாலை பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 5 ஆயில் டேங்கர்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து - ஆந்திராவில்..