ஆழ்குழாய் கிணறு அங்கன்வாடி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா-திருப்பூர்


      திருப்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து  ஆழ்குழாய் கிணறு அங்கன்வாடி அமைக்கும் பணி. 
      திருப்பூர் தொகுதிக்குட்பட்ட ,45வது வார்டு, டிமாண்ட் தெற்கு வீதி பகுதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவும், ஆண்டிக்காடு பகுதியில் ரூ.10.25 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்கவும்,  ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டிக்காடு பகுதியில்  புதிய தார்சாலை அமைக்கவும் எனமொத்தம் ரூ.43.75 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை விழாக்களை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் "மக்கள் நண்பன் " மாண்புமிகு. சு.குணசேகரன் எம்எல்ஏ அவர்கள் தலைமை தாங்கி , அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



 இந்த விழாக்களில் , 45-வார்டு முன்னாள் கவுன்சிலர் எம்.கண்ணப்பன், 3வது மண்டல உதவி ஆணையர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் S.முனியாண்டி, சுகாதார அலுவலர் பிச்சை,அர்பன் வங்கி தலைவர் பிகேஎஸ்.சடையப்பன், சுகாதார ஆய்வாளர் கோகுல நாதன், குழாய் ஆய்வாளர் தங்கராஜ், அதிமுக நிர்வாகிகள் கிளை செயலாளர் மையூரநாதன்,கண்ணபிரான், சாகுல் ஹமீது,  கோர்ட் பாலு பேபி, ஜவஹர், சரஸ்வதி, ஜீவனந்தம் மகேஷ்,செந்தில்,சரவணன், சைய்யது அலி,அய்யாக்குட்டி, தம்பி மைதீன், செந்தில், ரத்தினசபாபதி, ராஜகோபால், தஸ்தகீர், தேவ்மனோகர், முத்துக்குமார், வலுப்பூரான், நாகராஜ், நூர்ஜஹான், சிவகாமி ,அமுதா மல்லிகா, நூருல்ஹசன், குணசேகரன், ரவிக்குமார், பிரகாஷ், குட்டி, ரங்கநாதன், ரங்கசாமி .தினேஷ் ,விசுவநாதன், ஹைதர்அலி,  சோட்டா, கமலக்கண்ணன், பழனிசாமி, சுப்பிரமணி,சுசீலா .ஜோதி விஜயா, கமலா ராஜேந்திரன், அக்பர்,சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர். நா. அருண், திருப்பூர் மாவட்டம்.