கார்த்தி சிதம்பரம் எம்பி - அவரது மனைவி ஸ்ரீநிதி மேல் முறையீடு

     சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..


          காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி இருவரும் சென்னை முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 2015ம் ஆண்டு ஒரு ஏக்கர் நாலேகால் கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி என குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்து, அதற்கான வருமான வரியும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி பெற்ற தொகையை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


     இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஜூன் 19ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.