ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்க புகலிடம் கோருவோரை தங்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ராடிசனின் பார்க் இன் ஓட்டலில் கத்தி ஏந்திய ஒருவர் குத்தியதில் காவலர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் தாக்குதலுக்கான காரணம், போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கிளாஸ்கோவில் நடந்த இந்த பயங்கரமான சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கத்தியால் குத்திய நபரை போலீசார் சுட்டுக்கொலை!!.