அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு, தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியதோடு மட்டும் அல்லாமல் 1652 கோடி ரூபாய் ஒதிக்கீடும் செய்துள்ளது. இத்திட்டத்தில் அத்திக்கடவிலிருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் ஏராளமான ஏரிகள், குளங்களை பவானி ஆற்று நீரால் நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதாகவும், அறிவிக்கப்படும் திட்டங்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு இறுதிக்குள் திட்டம் நிறைவேற்றப்படும். முற்றிலும் மாநில அரசின் நிதியில் இருந்து திட்டம் நிறைவேற்றப்படும். திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.