6,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!! போலீஸ் வலைவீச்சு..

சேலம் மாவட்டம் ஓமலூரையடுத்த காடையாம்பட்டி அருகே 6,000 கிலோ ரேஷன் அரிசியை வைக்கோலுக்கு இடையே வைத்து லாரியில் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.



சேலம் மாவட்டம் ஓமலூரையடுத்த காடையாம்பட்டி அருகே 6,000 கிலோ ரேஷன் அரிசியை வைக்கோலுக்கு  இடையே வைத்து லாரியில் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த அரிசி மூட்டைகளை கீழே போட்டுவிட்டு, லாரி ஓட்டுநர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், ரேஷன் அரிசியை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கடத்திச் செல்லும் போது, அந்த மாநிலத்திற்குரிய நம்பர் பிளேட்டை மாற்றி கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.