சீன நிறுவனங்களின் ரூ. 5000 கோடி மதிப்பிலான 3 முதலீட்டுத் திட்டங்கள் ரத்து!!


காராஷ்ட்ரா அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் 3770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகன தொழிற்சாலை அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


பிஎம்ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி, சீனாவின் போட்டான் நிறுவனத்துடன் சேர்ந்து 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.


இதுபோல் ஹெங்க்லி இஞ்சினீயரிங் நிறுவனத்தில் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள விரிவாக்க திட்டத்திற்கும் கையொப்பமிட்டுள்ளது.


கல்வானில் நடந்த தாக்குதலையடுத்து இந்த மூன்று ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் கலந்து பேசிய பின் இம்முடிவை எடுத்துள்ளதாக அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.