முதல்வர் பழனிசாமி மாலை 5 மணிக்கு மக்களிடம் உரை!!..


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. அதனையடுத்து, கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் மதுரை, தேனியிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.