பீகாரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று தங்களின் சேவைக்கு மாஸ்க் தயாரிக்க மாற்றுத் திறனாளிகளை பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் பகுதியின் அரசு சாரா அமைப்பான நாராயண் சேவா சன்ஸ்தான் கொரோனா தொற்று காலத்தில் போலீஸ், ரயில்வே துறை மற்றும் பொதுமக்களுக்கு 40,000 முக கவசம் வழங்க எண்ணி, மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் பயிற்சி அளித்து மாஸ்க் தயாரிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்தனர்.
அந்நிறுவனத்தின் இந்த முடிவால் ஜெய்ப்பூரில் வேலையின்றி தவித்த பல மாற்றுத் திறனாளிகள் தற்போது மாதம் ரூ.3000 வரை சாம்பாதிக்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் மாஸ்க்குகள் பல பேருக்கு உதவியாக இருக்கிறது.
மேலும் அந்த அமைப்பானது பல ஏழை மக்களுக்கு உணவளித்து சேவையாற்றி வருகிறது.