பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுதாகர் அனிதா ஆகிய இவர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் நடந்தது. இதனையடுத்து சுதாகர் சென்னையில் விசாயர்பாடி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சாதி மறுப்பு திருமணம் என்பதால் அனிதாவின் உறவினர்கள் சரமாரியாக சுதாகரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் மண்டையின் மேற்புறத்தில் அரிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டப்பட்ட நிலையில் இருந்த சுதாகர் சென்னையில் சாலையோரத்தில் கிடப்பதாக தகவல் அறிந்த போலீசார் சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து அவரது உடல் நிலையைப் பரிசோதித்து மற்றும் அங்கேயே பிரேதப் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சாதி மறுப்பு திருமணத்தால் மரணம்!!