புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடல்!! முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..


புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 87 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில், புதுச்சேரி  முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்றும் யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்றும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.