3 நாட்களுக்கு பேருந்துகள் இயங்காது...

செய்யாறு அரசு பேருந்து பணிமனை நடத்துநர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 3 நாட்களுக்கு பேருந்து பணிமனை மூடல். 



    செய்யாறு அரசு பேருந்து பணிமனை நடத்துநர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அவர்கள் 5 பேரும் செய்யாறு மற்றும் ஆரணி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  தொடர்ந்து ஐந்து பேரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து மண்டல மேலாளர் இன்று முதல் மூன்று நாட்கள் செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயங்காது என்று உத்தரவிட்டுள்ளார். ஊழியர்கள் யாரும் பணிமனைக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பணிமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.