முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு!!!..

முகம் சிதைந்த நிலையில் திரியும் குரங்கு கேரளாவில் மற்றொரு பரிதாபம்.



  கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அடங்குவதற்குள் தற்போது குரங்கு ஒன்று முகம் சிதைந்த நிலையில்  திரிந்து வருகிறது. 


  வயநாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் இப்புகைப்படத்தை எடுத்துள்ளார். குரங்கிற்கு வலது கண் மற்றும் மூக்கு இல்லாத நிலையில் முகம் பெருமளவில் சிதைந்தும் உள்ளது. அதன் கைகளில் காயம் ஏற்பட்டு சீழ் வடியும் நிலையில் நகர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. 


   இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாக முதங்கா வனப்பகுதியில் அதிகாரி தெரிவித்துள்ளார்.