நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஜூன் 21ல்....

ஞாயிறன்று அரிதான ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணம்



நெருப்பு வளையம் என்று பிரபலமாக அறியப்படும் சூரியகிரகணம் ஞாயிறன்று  ஏற்படுகிறது. ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றும். இது 'வளைய சூரிய கிரகணம்'அல்லது ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படுகிறது. இது காலை 10:22 முதல் பகல் 1:32 மணி வரை நீடிக்கிறது.


மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34% தெரியும்.


அடுத்த சூரிய கிரகணம் 2020 டிசம்பர் 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே காண வேண்டும்.


இந்தச் சூரிய கிரகணம் கொரோனா வைரசை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வானியல் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் கல்விக்குழு தலைவர் அனிகெட் சூலே கூறும்போது, ‘சூரிய கிரகணம் என்பது ஒரு நிலவு சூரியனை மறைக்கும் ஒரு நிகழ்வு. சூரிய கிரகணங்களுக்கும் பூமியில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, கிரகணம் நுண்ணுயிரிகளை பாதிக்காது. அதே போல் அந்தத் தருணத்தில் உணவு உட்கொள்வதால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை. கிரகணத்தின் போது சூரியனிலிருந்து எந்த ஒரு புதிரான கதிர்களும் வெளியே வருவதில்லை’ என்றார்.