ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே குருமந்தூரில் கள்ள நோட்டை மாற்ற முயன்றபோது பிரபு மற்றும் அழகுதுரை ஆகியோரை மக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே குருமந்தூரில் ரூ.500 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பிடிப்பட்ட பிரபு மற்றும் அழகுதுரையிடமிருந்து ரூ. 55 ஆயிரம் மதிப்புள்ள ரூ.500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது!!