தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 2,500ஐ கடந்தது.


மிழகத்தில் இன்று மேலும் 2516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக தினசரி பாதிப்பு 2,500ஐ கடந்தது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 64,603 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 1,227 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 35,339 பேராக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 833 பேராக உயர்வடைந்துள்ளது.