கடைசி தேர்வை தவற விட்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. வழங்கப்படுவதாக, தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 24ந் தேதி நடந்த 12 ம் வகுப்பு கடைசி தேர்வை, 32 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை. இவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதித்து, தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி மறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விருப்ப கடிதத்தை, வரும் 24-ம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வை தவறவிட்ட பிளஸ்-2 மாணவர்கள் - மீண்டும் வாய்ப்பு!!!.