விழுப்புரத்தில் விளையாட்டுகளுக்கு தடை!!!


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவுவதையடுத்து, மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும். அந்த வகையில் கிரிக்கெட், வாலிபால், கபடி உள்ளிட்ட மைதானங்களில் விளையாடும் விளையாட்டுகளுக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தடை விதித்துள்ளார்.