கிராமத்தில் மாவட்ட கல்வி அலுவலகம்!! ஆசிரியர்கள் அலுவலர்கள் அவதி..


ருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதன் கட்டுப்பாட்டில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் தொடக்க நடுநிலைப்பள்ளிகள், துவக்கப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் 234ஆம் அலுவலகத்தில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலரின் கீழ் 24 பேரும் உள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு  14 நலத்திட்ட உதவிகள் இங்கு தான் வழங்கப்படுகிறது. குடும்பத்தில் வருவாய் ஈட்டக் கூடிய தலைவர் இறந்துவிட்டால் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய உதவித்தொகை இங்கு வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள், அலுவலர்களுக்குரிய பணப்பலன்கள், சர்வீஸ், ரிஜிஸ்டர் மற்றும் பிற அலுவல் பணிகளுக்கு இதன் கட்டுப்பாட்டில் உள்ள 585க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் இங்கு வந்து செல்வது தான் வழக்கம். தற்போது மாவட்டக் கல்வி அலுவலகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்யபட்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் அரசு பள்ளிக் கட்டிடத்தில்  செயல்பட்டு வருகிறது. 


தனியார் கட்டிடத்தில் வாடகை அதிகம் என்பதால் இடமாற்றம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் நான்கு வழிச்சாலையில் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் ஊருக்கு ஒதுக்கு புறமாக தனிக்கட்டிடமாக இருப்பதால் திருட்டு பயம் உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை நாளில் மாற்றுப் பணி போடும் போது பெண் அலுவலா்கள் தனியாக இருந்து பணிபுரிய முடியவில்லை. எனவே கிராமத்தில் இயங்கும் மாவட்ட கல்வி அலுவலகத்தை நகரில் காலியாக உள்ள அரசு கட்டிடங்களில் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.