50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி.
10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இத்தகைய அதிர்ச்சி தகவலை அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் சுமார் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் சிக்கல் தொடர்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.