சீனாவுக்கு எதிரான கார்ட்டூன் வெளியிட்டதால் அமுல் டுவிட்டர் அக்கவுண்ட் ஒரு நாள் முழுக்க முடக்கம்.
சீன நாட்டு பொருட்களுக்கு எதிராக கார்ட்டூன் வெளியிட்டதாக கூறி, இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல் பால் நிறுவன அக்கவுண்டை முடக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ம் தேதி மாலை, அமுல் நிறுவனம் டுவிட்டரில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டு இருந்தது. அதில் அமுல் நிறுவனத்தின் பிரபலமான, அந்த சிறுமி படம், ஒரு கையால் டிராகன் படத்தை நோக்கி கையை நீட்டியபடி. Exit the Dragon? என்று கூறுவதுபோல வாசகம் இடம்பெற்றிருந்தது.
டிராகன் படத்துக்குப் பின்னால் டிக் டாக் செயலி படமும் இடம்பெற்றிருந்தது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு கார்ட்டூன் அமுல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அமுல் நிறுவனம் பல்வேறு விவகாரங்களிலும் கவனம் ஈர்க்கும் வகையில் முன்பும் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
கடந்த 3ம் தேதி இந்த கார்டூன் வெளியிடப்பட்ட நிலையில், 4ம் தேதி மாலை அமுல் டுவிட்டர் கணக்கை முடக்கியது டுவிட்டர் நிறுவனம்.
இதையடுத்து அமுல் நிறுவனம், டுவிட்டர் அமைப்பது கேட்டுக் கொண்ட பிறகு ஜூலை 5ஆம் தேதி காலை முதல் பழையபடி அந்த அக்கவுண்ட் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பொருள்படும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதால் தான் இதுபோன்ற நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.