சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரயில்வே ஒப்பந்தம் ரத்து!!.

சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ. 471 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து.


டந்த 2016-ம் ஆண்டு ரூ.471 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆய்வு மற்றும் சிக்னல் வடிவமைப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


கான்பூர் நகரிலிருந்து முகல்சாரி ரயில்வே நிலையம் வரை 417 கி.மீ. தொலைவுக்கு சரக்குப் போக்குவரத்துக்காக தனியாக ரயில் பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டது.  ரூ.471 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் ரயில்வே சிக்னல், தொலைத்தொடர்பு தடம் அமைக்க பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆய்வு மற்றும் சிக்னல் வடிவமைப்பு நிறுவனத்துக்கு  கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்டது.


இதுகுறித்து ரயில்வேயின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சீன நிறுவனத்தின் மெத்தனமான பணியால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுதான். தற்போது எல்லையில் நிலவும் சூழலுக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.


4 ஆண்டுகளாக 20% பணிகளே முடிவடைந்துள்ளதால் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட  ரூ.471 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.