கூட்டுறவு வங்கிகள் ஆர்பிஐ-ன் நேரடி கட்டுப்பாட்டில்!! மத்திய அமைச்சரவை அவசர சட்டம்..


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.  இந்த சந்திப்பு கொரோனா வைரஸ் பாதிப்பின் மத்தியில் நடந்த அமைச்சரவை கூட்டமாகும்.


1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அரசு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை அதிகாரங்களின் கீழ் கொண்டுவருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 


இது தொடர்பாக ஊடகங்களுக்கு உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், திட்டமிடப்பட்ட வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்று கூறினார். முத்ரா யோஜனாவின் கீழ் ஷிஷு கடன் வகை கடன் வாங்குபவர்களுக்கு 2% வட்டி மானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.