தமிழ் சினிமாவில் உருவாகி வரும் சிறு பட்ஜெட் திரைப்படங்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாக தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், zee5 போன்ற தளங்கள் மூலமாக ரிலீஸ் ஆகி வருகின்றன.
வெங்கட் பிரபு இயக்கிய ஆர்.கே.நகர், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண் குயின் போன்ற திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளம் மூலமாக வெளியிடப்பட்டிருந்தன.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள காக்டைல்ஸ் என்ற திரைப்படம் ஓடிடி தளம் மூலமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
zee5 தளத்தின் வழியாக வரும் ஜூலை 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக யோகி பாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் யோகி பாபு காக்டைல்ஸ் திரைப்படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.