கள்ளச்சாராயம் தொழிலை கைவிட்டோருக்கு கறவை மாடுகள்!! மாவட்ட ஆட்சியர்..


ள்ளச்சாராயம் தொழிலைக் கைவிட்டு மனம் திரும்பியவர்களுக்கு ரூபாய் 43.20 லட்சம் மதிப்பில் மறுவாழ்வுக்காக கறவைமாடுகள் உள்ளிட்ட நல திட்டங்களை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் மாவட்ட எஸ்.பி மயில்வாகணன் ஆகியோர் வழங்கினர்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாம்பசிவபுரம், நாராயணபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அப்பகுதியை சேர்ந்தவர்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் எடுத்த தொடர் நடவடிக்கையை அடுத்து அப்பகுதி மக்கள் தற்போது சாராய விற்பனை செய்யும் தொழிலில் கைவிட்டு மனம் திரும்பியுள்ளனர் . அதனையடுத்து மனம் திரும்பிய சாராய விற்பனை செய்தவர்கள் மறுவாழ்வுக்காக ரூபாய் 43.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் உள்ளிட்டோர் வழங்கினர். 


37 பேருக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மனம் திரும்பி வந்தால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளதாக உறுதி அளித்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டவர்கள் முழுமையாக மனம் திரும்பி தொழிலை கைவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து மனம் திரும்பிய பலர் ஏற்கனவே கறவை மாடுகள் வைத்திருந்ததால் அவர்களுக்கு அரசு சார்பாக மாட்டுக் கொட்டகைகள் மற்றும் கடைகள் அமைத்து தரப்பட்டன.