ஒட்டுநர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!


     விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயங்காத காரணத்தால் வருமானம் இழந்த ஒட்டுநர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 


     அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபின் அவர்கள் கூறியது:


     ஊரடங்கு உத்தரவால் 60 நாட்களுக்கும் மேலாக வாடகை கார்கள் இயங்காததால் வருமானம் இன்றி தவித்து வருவதாக கூறினர். இரண்டு மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தல் காலத்தை செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் செலுத்த வேண்டிய சாலை வரிகளை ரத்து செய்ய வேண்டும். என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம் என்று கூறினார்கள்.