கொரோனா தடுப்பு, தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!


  கொரோனா தடுப்பு, தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:


1.இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.


2.தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரிப்பு


3.உரிய முறையில் சிகிச்சை அளித்து வருவதால் இறப்பு குறைந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு


4.கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையிலும் அரசு சிறப்பாக செயல்படுகிறது


5.பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும்


6.மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது


7.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்


8.நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்


9. நோய் முற்றிய பிறகு சென்றால் மருத்துவம் பலன் அளிக்காது.


    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.