புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி தொடக்கம்


             புதுக்கோட்டை தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான விடைத்தாள்களை திருத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார் 


      அப்பொழுது விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் மையம் கிருமிநாசினிகள் வழங்கும் மையம் முக கவசம் வழங்கும் மையத்தை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி இது சம்பந்தமான விவரங்களை மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டறிந்தார். 


       பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய 7 மையங்களில் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 1250 ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 நபர்களுடைய விடைத்தாள்கள் திருத்த படுவதாகவும், இப்பணிகள் ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கோட்டாட்சியர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் இப்பணியில் ஈடுபட்ட படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 


     மேலும் வெளி மாவட்டம் வெளி மாநிலத்திற்கு சென்றுள்ள ஆசிரியர்களை அழைத்து வர சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆசிரியர்கள் வந்து செல்வதற்காக 8 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


     மேலும் மாவட்டத்தில் உள்ள ஏழு மையங்களில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்வு மையத்தில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக இப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் ஆய்வில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.


    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதால் தேர்வுதாள்களை திருத்தும் ஆசிரியர்கள் போதிய இடைவெளி விட்டு தேர்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு அறைக்கு 8 நபர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தடுப்பு பணி சிறப்பாக நடைபெறும் என்றும் பணியில் தொய்வு இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். 


    இந்த ஆய்வின் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் கூடுதல் கல்வி அதிகாரிகள் வட்டார கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.