திருக்கோவிலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்  அருகே மேலதாழனூர் கிராமத்தில் வசிப்பவர் கண்ணன் மகன் ஐயப்பன் (29)  இவர் கடந்த ஒரு மாதம் வேலை நிமித்தமாக மாமியாரிடம் தன் வீட்டைப் பராமரித்து கொள்ளுமாறு பெங்களூர் சென்று கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பதாக,  வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள்   மர பீரோவை உடைத்து தங்க நகைகள், பணம், லேப்டாப் போன்ற சில பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டார்கள். இந்நிலையில் ஆன்லைன்  மூலம் போலீசாருக்கு புகார் அளித்ததின் பேரில் திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.