மீண்டும் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

   


தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.


   இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளருக்கும் “கரும்பு விவசாயி” சின்னத்தை பொது சின்னமாக வழங்கி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


   இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் கட்சியின் சார்பாக அனைத்து இடங்களிலும்  போட்டியிட வேண்டும் என்றும் சிறப்பான முறையில் களப்பணி ஆற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.