திருக்கோவிலூரில் சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி  பாரத ஸ்டேட் வங்கி ஏடி.எம்மில் கொள்ளை முயற்சி! 


    கள்ளக்குறிச்சி மாவட்டம்,  திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலை மார்கெட்     செல்லும்    வழியில் பாரத  ஸ்டேட் வங்கி ஏடி.எம்மில் நேற்று  இரவு    கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆள்நடமாட்டம் கண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்நிலையில் திருக்கோவிலூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.