மாண்புமிகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அய்யாவின் 32-வது இறப்பு ஆண்டு விழா இன்று அதிமுகவின் மாநில செயலாளர் இணைச் செயலாளர் டாக்டர் சுனீல் (Joint Secretary, State Youth Wing, AIADMK) அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர் தொண்டர்கள் முன்னிலையில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். நூற்றுக்கணக்கான தலைவர்கள் மற்றும் எம்.ஜி.ஆரைப் பின்பற்றுபவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களால் நினைவு விழா அனுசரிக்கப்பட்டது. டாக்டர் சுனீல் அவர்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்த சுமார் 1000 மேற்ப்பட்ட ஏழை பெண்களுக்கு புடவைகளை வழங்கினார். நினைவஞ்சலி செலுத்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னாதனமும் வழங்கப்பட்டது.
அதிமுகவின் உள்ளூர் கட்சித் தலைவர்கள் மற்றும் பாடகர் குமார், பெரிய வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், ரகு, கான் பாய் மற்றும் ராம் பிரசாத் ஆகியோர்கள் இன்னும் கட்சி பல்வேறு செயலில் உள்ள உறுப்பினர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். டாக்டர்.சுனீல் அவர்கள் தொண்டர்களையும், கட்சி உறுப்பினர்களையும் வரவேற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார்.