கைப்பந்து விளையாட்டு மைதானம் துவக்கம்- கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐடிஐ.


     விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம்  அருகே பழனிவேலு ஐடிஐ கைப்பந்து கழகம் சார்பில் கல்லூரி கைப்பந்துகுழு  மற்றும் கண்டாச்சிபுரம் வட்டார அனைத்து இளைஞர்களும் பயன்பெறும் வகையில்  விளையாட்டு மைதானம் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.  விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கைப்பந்து கழக தலைவருமான உயர்திரு.டாக்டர். பொன். கௌதம சிகாமணி அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் நல்வாழ்த்துக்களுடன்  முன்னிலை வகித்து, திரு.கோத குமார் அவர்கள் விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து வாழ்த்துரை வழங்கினார்.



    இவ்விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற  பழனிவேலு கல்வி நிறுவன தலைவர் உயர்திரு.ராஜேந்திரன் , முதல்வர் திரு.சத்யராஜ், அரசு போக்குவரத்து கழக  பணியாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர், வாலிபால்  திரு.மணி, டாக்டர் திரு.மூர்த்தி, அரிமா சங்க சாசன தலைவர் திரு.ரவிச்சந்திரன், சுமங்கலி  திரு.குணசேகர், திரு.பிரகாஷ், அரிமா சங்க தலைவர், திரு.ராஜேந்திரன் திரு.ராமசாமி, தமிழ் ஆசிரியர், பானாம்பட்டு திரு. சண்முகம், காவல்துறை ஆய்வாளர் திரு, ஞானமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் திரு.பாலாஜி  ஆகியோர்கள் பங்கேற்றார்கள்.


                                                                                                                              நிருபர்.சீனுவாசன்.