திருச்சிக்கு முதல்கட்டமாக விற்பனைக்கு வந்துள்ளது; துருக்கி வெங்காயம்,
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், திருச்சிக்கு வந்துள்ளது. பெரிய வெங்காயம் 60 டன்னும், சின்ன வெங்காயம் 30 டன்னும் என மொத்தம் 90 டன் வெங்காயம் முதல்கட்டமாக விற்பனைக்கு வந்துள்ளன. மொத்த விற்பனைக் கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ 60 முதல் 110 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 40 முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.