விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் காந்தி தொழு நோயாளிகளுக்கு கோகுல் கிருஷ்ணன் நினைவையொட்டி கோகுல் தொண்டு நிறுவனத்தின் தலைவர், ப. ஏழுமலை, அவர்களால் உணவு மற்றும் போர்வை வழங்கப்பட்டது. பின்னர் நல்லாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடிகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளான சுதாகர், தனசேகர், ஜான் உடன் இருந்தனர்.