உலக முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஒருவன்குப்பம் கிராமத்தில் உள்ள ஆர் சி தொடக்கப்பள்ளியில் கண்டாச்சிபுரம் கோவல் நகர அரிமா சங்கம் சார்பில் கிறிஸ்மஸ் நற்செய்தி விழா கொண்டாடப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி,இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்த நற்செய்தியும் அளித்து மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க தலைவர் ஏ.வி திரு.ராஜேந்திர், திரு.ஜெய ராஜேந்திரன் செயலாளர், திரு.தங்கவேல் பொருளாளர், திரு.குணசேகரன் வட்டாரத் தலைவர், திரு.பிரகாஷ் மாவட்ட தலைவர், திரு.ரவிக்குமார் சாசன செயலாளர், திரு.மோகன், பெருமாள் துணை தலைவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள், பங்குத்தந்தை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.