லாட்டரிக்கு 28 சதவீத வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்றது,
38-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், முதன்முறையாக, லாட்டரி சீட்டிற்கு, நாடு முழுவதும் ஒரே சீராக, 28 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது குறித்து, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருவாய்துறை செயலாளர் ஏ.பி. பாண்டே, மாநில அரசுகள் மற்றும் அரசு அங்கீகாரத்துடன் நடைபெறும் லாட்டரிக்கு, ஒரே விகிதமாக 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த புதிய வரி விதிப்பு அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் கூறினார். ஜி.எஸ்.டி.,கவுன்சிலில் முதன் முறையாக, ஓட்டெடுப்பு நடத்தி, வரி விதிப்பை தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.