பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா ஆந்திரா சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதாவை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக கொண்டுவந்தார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது ஒரு வாரத்துக்குள் விசாரிக்கப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களில் அதாவது 3 வாரத்திற்குள் தூக்கு தண்டனை வழங்கப்படும்.
பீசா மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் புதிய சட்ட மசோதா வாக இன்று நிறைவேற்றியது ஆன்லைன் முறைகேடு மற்றும் சிறுவர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை முறையாக கையாண்டு இந்திய சட்டத்தின் கீழ் பிரிவு 354 E மற்றும் 354 F ஆகியபிரிவுகளை அறிமுகப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது