ரூ.1000 கோடி எம் சாண்ட் ஊழல் - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு


சமீபத்தில் அறப்போர் இயக்கம் சென்னை நேர்மையான மாநகராட்சி மாற்ற மாற்றம் என்ற தலைப்பில் சில கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறார்கள். 


அதில் குறிப்பாக 2017 முதல் தமிழகத்தில் ஆற்று மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை ஒரு கன அடிக்கு ரூபாய் 40 இல் இருந்து 120 சென்றது அன்று முதல் சென்னை மாநகராட்சி கான்கிரீட் சாலை, மழைநீர், வடிகால், நடைபாதை போன்ற அனைத்துக் கட்டங்களிலும் ஆற்று மணலுக்கு பதிலாக தான் பயன்படுத்தி வந்ததாகவும்,ஆற்றுமணல் பாதியும் ஆற்று மணல் விலை ஒரு கன அடி 100 ரூபாய் என்றால் எம்.சாண்ட் இன் விலை 50 ரூபாய் மட்டுமே.ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு தொடர்ந்து, ஆற்று மணலின் விலையை ஒப்பிட்டு ஒப்பந்தங்கள் வழங்கியதன் மூலம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் இழப்பு சென்னை மாநகராட்சி ஏற்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தங்களது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். 


இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சிதுறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணியின் ஊழல் குறித்து  அறிக்கை வெளியிட்டிருந்தார்.


சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்பு துறையினர் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன ஊழல்களை ரகசியமாக விசாரித்து எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா?


அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட் ஆவது லஞ்ச ஊழல் தடுப்பு துறை தானாக முன் வந்து விசாரித்து போட்டி இருக்கிறதா என்ற கேள்விகளும்? சந்தேகங்களும்? எழுகின்றன.


 உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் திரு.எஸ்.பி வேலுமணி முதலமைச்சரின் வலது கரமாகவும் இடது கரமாகவும் திகழ்பவர் என்பது ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே! 


ஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள இந்த, ஆற்று மணலுக்கு பதில் என் தான் என்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்கும் அமைச்சரையும் அவருக்கு துணை போகும் உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்பு துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.